பொக்காபுரம் கோவிலுக்கு செல்ல கூடலூரில் பக்தர்கள் கூட்டம்

பொக்காபுரம் கோவிலுக்கு செல்ல கூடலூரில் பக்தர்கள் கூட்டம்

Update: 2022-03-06 13:21 GMT
கூடலூர்

பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடலூர் வழியாக கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் கூடலூர் பஸ் நிலையத்தில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. 

இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் வரிசையாக நிற்க வைத்து பஸ்களில் பொக்காபுரம் அனுப்பி வருகின்றனர். இதேபோல் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் நீர், மோர் வழங்கும் பணியை போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கூடலூர் பஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்