மதுகுடிக்க பணம் கொடுக்க மறுப்ப; கள்ளக்காதலி கழுத்து அறுத்து கொலை - வாலிபர் கைது

மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-05 21:06 GMT
கலபுரகி:

கலபுரகி டவுன் ரோஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சஹானா பேகம்(வயது 36). இவரது கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சஹானா பேகத்திற்கும், வாசிம் அக்ரம்(32) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சஹானா வீட்டிற்கே சென்று அவருடன் வாசிம் அக்ரம் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குடித்துவிட்டு சஹானா வீட்டிற்கு சென்ற வாசிம் அக்ரம் தனது செலவுக்கும், மது குடிக்கவும் பணம் தரும்படி கேட்டு உள்ளார். ஆனால் இதற்கு சஹானா மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் சஹானாவின் கழுத்தை கத்தியால் அறுத்து வாசிம் அக்ரம் கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ரோஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிம் அக்ரமை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்