விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி செல்வதி(வயது 48). அதே பகுதியில் உள்ள வடக்குத்தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன்(19). சம்பவத்தன்று செல்வதியின் மகன் சுரேஷ், அருள்செல்வனிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது அதனை செல்வதியிடம் திருப்பி கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியநிலையில் செல்வதியை அருட்செல்வன் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் செல்வதி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து அருள்செல்வனை கைது செய்தார்.