மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
பெரம்பலூர்:
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை(திங்கட்கிழமை) முதல் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.
இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.