திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2022-03-05 18:49 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் நகரில் மேற்கு பகுதியில் உள்ள பாக்யா நகர், எஸ்.எம்.எஸ். நகர், சேதுபதி நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதையில் உள்ள மின் கம்பியை தரம் உயர்த்தும் பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்