எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டம்

வேலூரில் எல்.ஐ.சி.ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-05 18:10 GMT
வேலூர்
வேலூரில் எல்.ஐ.சி.ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. 
போராட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டி.தேவராஜ், பொதுச்செயலாளர் எஸ்.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 
போராட்டத்தில், எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் செய்தனர். முடிவில் இணை செயலாளர் எஸ்.ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்