உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலி
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ராவுத்தராயன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்புசாமி(வயது 55). விவசாயியான இவர் தனது கிராமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மூலசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சுப்புசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.