ரெயில் நிலையத்தில் வாலிபர் பிணம்

கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

Update: 2022-03-05 16:45 GMT
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலைய நடை மேடையில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரி முகேஸ்குமார், நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த அன்பரசன் (வயது 35) என்பதும், இவர் திருமணத்துக்கு பின்னர் மனைவியின் ஊரான கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம், சொட்டால்வன்னம் தெற்கு தெருவில் வசித்து வந்ததும் தொிய வந்தது. இவர் நேற்று காலை தஞ்சைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு வந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசன் எப்படி உயிரிழந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அன்பரசனுக்கு சுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்