பழனி வரதமாநதி அணை நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது
பழனி வரதமாநதி அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.
பழனி:
பழனி அருகே வரதமாநதி அணை அமைந்துள்ளது. 66 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கோம்பைக்காடு, சவரிக்காடு பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். அணை மூலம் பழனி, ஆயக்குடி பகுதியில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடைபெறுகிறது. மேலும் ஆயக்குடி பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு முழுகொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் கடும் வெயில் நிலவுகிறது. மேலும் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதன்படி, அணையின் நீர்மட்டம் தற்போது 45 அடியாக குறைந்தது. இதனால் கோடை காலத்தில் ஆயக்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ? என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உத்தரவுப்படி கடந்த 3-ந்தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் குடிநீருக்காக மட்டும் 3 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றனர்.