தீக்குளித்த பெண், சிகிச்சை பலனின்றி சாவு
வேதாரண்யம் அருகே தீக்குளித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு திருணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன். இவருடைய மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதே? என மனவேதனை அடைந்த பிரியா சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக
இதுகுறித்த புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.