உக்ரைனில் பதுங்கு குழியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பரிதவித்தோம்; தாயகம் திரும்பிய கொடைக்கானல் மாணவி பேட்டி
உக்ரைனில் பதுங்கு குழியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பரிதவித்ததாக தாயகம் திரும்பிய கொடைக்கானல் மாணவி தெரிவித்தார்.
கொடைக்கானல்:
உக்ைரனில் பதுங்கு குழியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பரிதவித்ததாக தாயகம் திரும்பிய கொடைக்கானல் மாணவி தெரிவித்தார்.
கொடைக்கானல் மாணவி
உக்ரைன்-ரஷியா இடையே போர் நடப்பதால், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவ-மாணவிகள் நாடு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அங்கு சிக்கி தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்பயனாக பல மாணவர்கள் மீட்கப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளனர்.
அதன்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் மகள் அனுசியாமோகன் உக்ரைனில் சிக்கி தவித்தார். இந்தநிலையில் அவர் உள்பட சில மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு நேற்று முன்தினம் தாயகம் திரும்பினர். இதற்கிடையே அனுசியாமோகன் நேற்று கொடைக்கானலுக்கு வந்தார்.
அப்போது அவரை பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். மேலும் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர் கலாவதி தங்கராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். பின்னர் அந்த மாணவி நிருபர்களிடம் கூறியதாவது:-
பரிதவித்தோம்
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தேன். போர் காரணமாக நானும், என்னுடன் படிக்கும் மாணவ-மாணவிகளும் அங்குள்ள பதுங்கு குழிக்குள் தஞ்சம் அடைந்தோம். நாங்கள் இருந்த பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக போர் முழக்கமாக இருந்தது. இதனால் அச்சத்துடனேயே இருந்ேதாம்.
பதுங்கு குழியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பரிதவித்தோம். பின்னர் ஒருவழியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் எங்களை மீட்டு விமானம் மூலம் தாயகம் அழைத்து வந்தனர். என்னை போன்று இன்னும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவ-மாணவிகள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடைக்கானலுக்கு திரும்பிய மாணவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மாணவர்கள் அனைவரையும் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.