திருவாரூர் கடைவீதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்

திருவாரூர் கடைவீதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-05 15:18 GMT
திருவாரூர்:
திருவாரூர் கடைவீதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று   நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் 
திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக இருந்து வருகின்றன. இதில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகை கடை போன்ற பெரும்பாலான கடைகள் அனைத்தும் கடைவீதியில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.
ஒரு சில கடை தங்களது எல்லை தாண்டி விரிவுப்படுத்தல், நடைபாதை கடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. கடைவீதி உள்ளே எந்த நேரமும் கனரக வாகனம் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் வாகன ஒட்டிகள், நடந்து செல்பவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக வாகன நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத கடைவீதியாக இருந்து வருகிறது.
வாகனம் நிறுத்த இடவசதி 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். மேலும் கடைவீதியில் வாகனம்  நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்