மாங்காடு நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய ம.தி.மு.க.

மாங்காடு நகராட்சி தலைவர் பதவியை ம.தி.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-03-05 03:22 GMT
பூந்தமல்லி,  

மாங்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க.-14, ம.தி.மு.க.-2, அ.தி.மு.க. -6, சுயேச்சை -5 வார்டுகளில் வெற்றி பெற்றன. இந்த நகராட்சியில் தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

மாங்காடு நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற சுமதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 16-வது வார்டில் வெற்றி பெற்ற வாணி போட்டியிட்டார். இதில் 18 ஓட்டுகள் பெற்று ம.தி.மு.க.வை சேர்ந்த சுமதி மாங்காடு நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வாணி 9 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஜபருல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்