தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது

தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது.

Update: 2022-03-04 23:14 GMT
தேவூர்:
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரம் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதையடுத்து கணபதி ஹோமம் அபிஷேக ஆராதனை, அம்மை அழைத்தல், திருஊஞ்சல், சக்தி கரகம், அம்பாள் ரதம் ஏறுதல் நடந்தது.  தொடர்ந்து நேற்று தேரோட்டம் தொடங்கியது. திருத்தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  பக்தர்களின் பக்தி கோஷத்துடன் சென்ற தேர் கல்வடங்கம் மாரியம்மன் சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை மீண்டும் தேரோட்டம் தொடங்கப்பட்டு திருத்தேர் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை முன்பு நிறுத்தப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் அங்காளம்மன் கோவில் தேர் நிலையை அடைகிறது.

மேலும் செய்திகள்