சேதமடைந்த சாலை
கொல்லங்கோடு நகராட்சியில் 20-வது வார்டில் கிராத்தூர், அடச்சுவிளாகம், புதுவல், மஞ்சத்தோப்புகாலனி ஆகிய பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், கொல்லங்கோடு.
தெருவிளக்கு வசதி இல்லை
ஆரல்வாய்மொழி, கணேசபுரத்தில், ஆரல் பெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை தெருவிளக்கு வசதி இல்லை. அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
சாலை வசதி வேண்டும்
வடக்கு தாமரைகுளம் ஆற்றங்கரைேயாரம் சுடுகாடு செல்லும் ஒரு பாதை உள்ளது. இந்த பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் இதன் வழியாக ஒரு நபர் மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், இறந்தவர் உடலை 4 பேர் சேர்ந்து தூக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பாதையை விரிவுப்படுத்தி சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், வடக்குதாமரைகுளம்.
படிப்பகம் மீண்டும் திறக்கப்படுமா?
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலையன்விளையில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்கள் நலன் கருதி இங்கு காமராஜர் நினைவு படிப்பகம் கட்டப்பட்டது. ஆனால், இந்த படிப்பகம் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இதை பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த படிப்பக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி படிப்பகத்தை சீரமைத்து மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுதன், மலையன்விளை.
தெருவிளக்கு வசதி இல்லை
ஆரல்வாய்மொழி, கணேசபுரத்தில், ஆரல் பெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள தெருவில் இதுவரை தெருவிளக்கு வசதி இல்லை. அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்படுமா?
வெள்ளமடம், கிறிஸ்துநகர் ஈஸ்வர்காலனி தெற்கு தெருவில் கடந்த பல மாதங்களாக மின்சாரம் குறைந்த மின்னழுத்தமாக உள்ளது. இதனால், மின்மோட்டார், மிக்சி போன்ற மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. மேலும், மின்விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, குறைந்த மின்னழுத்ததை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம்குமார், வெள்ளமடம்.