வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-04 20:18 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் காலங் கரையான் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று செங்குளம் ரெயில்வே கேட் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்