சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

விருதுநகரில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-04 20:10 GMT
விருதுநகர், 
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 9 மணிக்கு 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணியளவில் முடிவடையும். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 10 வருட பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு 1.4.2003-க்கு பின் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்