பென்னாத்தூர் பேரூராட்சியை முதன்முறையா தி.மு.க.கைப்பற்றியது.
பென்னாத்தூர் பேரூராட்சியை முதன்முறையாக தி.மு.க.கைப்பற்றியது. தலைவராக பவானிசசிகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
அடுக்கம்பாறை
பென்னாத்தூர் பேரூராட்சியை முதன்முறையாக தி.மு.க.கைப்பற்றியது. தலைவராக பவானிசசிகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
பென்னாத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. 8 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் பவானி சசிகுமார், பா.ம.க. கவுன்சிலர் சுபாஷினிலோகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சுனன் தலைமையில் தேர்தல் நடந்தது. இதில் 13 ஓட்டுகள் பெற்று தி.மு.க. கவுன்சிலர் பவானிசசிகுமார் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர் அ.ஜீவசத்தியராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க.வினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பென்னாத்தூர் பேரூராட்சியில் தி.மு.க. இதுவரை வெற்றி பெற்றதில்லை. தற்போது தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும்.