கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வேளாங்கண்ணியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-04 19:16 GMT
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் கடற்கரை சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், வேளாங்கண்ணி பூக்கார தெரு சுனாமி குறிப்பு பகுதியை சேர்ந்த சாத்தையன் மகன் அந்தோணிதாமஸ் (வயது 32) என்பதும், இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிதாமசை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்