கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெற்றி
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தி.மு.க. வெற்றி
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
தலைவர் பதவிக்கான தேர்தலில் 8-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கோ.சரவணனும், அ.தி.மு.க. சார்பில் 12-வது வார்டு உறுப்பினர் மல்லிகாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சரவணன் 12 வாக்குகளும், மல்லிகா 3 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவராக சரவணன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் அறிவித்தார்.
துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
பிற்பகல் 3 மணி அளவில் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் 9-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தமிழரசி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
பின்னர் தலைவராக சரவணன், துணைத்தலைவராக தமிழரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை தேர்தல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வழங்கினார்.
வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவருக்கு தி.மு.க மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் எஸ்.கே.பி. கு.கருணாநிதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே. பன்னீர்செல்வம், நகர தி.மு.க. செயலாளர் சி.கே.அன்பு உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.