மானாமதுரை முதல் நகராட்சி தலைவராக போட்டியின்றி மாரியப்பன் கென்னடி தேர்வு

மானாமதுரை முதல் நகராட்சி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-03-04 18:38 GMT
மானாமதுரை,

மானாமதுரை முதல் நகராட்சி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தேர்வு செய்யப்பட்டார்.

மானாமதுரை

மானாமதுரை பேரூராட்சியில் இருந்து ‌நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக நகராட்சி தேர்தலை சந்தித்தது‌. நகராட்சியில் மொத்தமுள்ள ‌27 வார்டுகளில் தி.மு.க.14 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 7 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் மானாமதுரை நகராட்சி பொறுத்தவரை 27 வார்டுகளில் 14 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தனி மெஜாரிட்டிடன் நகராட்சி கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 27 வார்டு கவுன்சிலர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

தலைவராக மாரியப்பன் கென்னடி தேர்வு

இதனைத்தொடர்ந்து மானாமதுரை நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக 27-வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் கென்னடி மறைமுக தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 
அவருக்கு நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜமணி, அண்ணாத்துரை, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, யூனியன் துனை தலைவர், முத்துச்சாமி, ஒன்றிய பிரதிநிதி ஜெயமுர்த்தி, வார்டு உறுப்பினர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

துணைத்தலைவர் தேர்தல்

மானாமதுரை நகராட்சி துணைத்தலைவர் மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 15-வது வார்டு உறுப்பினர் தெய்வேந்திரன், தி.மு.க. சார்பில் 8-வது வார்டு உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 21 வாக்குகள் வாங்கி தி.மு.க. 8-வது வார்டு உறுப்பினர் பாலசுந்தரம் வெற்றி பெற்று நகராட்சி துணை தலைவர் ஆனார்.அ.தி.மு.க. 15-வது வார்டு உறுப்பினர் தெய்வேந்திரனுக்கு
5 வாக்கும் பெற்றார்.ஒரு வாக்கு செல்லாது.

மேலும் செய்திகள்