பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

Update: 2022-03-04 17:24 GMT
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
இடிகரை


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வினர் 12 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேரும், அ.தி.மு.க.வினர் 4 பேரும் வெற்றி பெற்றனர்.  இந்த பேரூராட்சி தலைவர் பதவியை கூட்டணி கட்சியான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பாளராக 8-வார்டு உறுப்பினர் சிவராஜன் அறிவிக்கப்பட்டார். 


இந்த நிலையில் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. 9.30 மணிக்கு தேர்தல் தொடங்கியபோது கூட்ட அரங்கில் தி.மு.க. கவுன்சிலர் 12 கவுன்சிலர்கள் இருந்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கவுன்சிலர் சிவராஜன் அங்கு இல்லை. 

இந்த நிலையில் தி.மு.க. சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் விஷ்வபிரகாஷ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அங்கிருந்த கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
அதன்படி விஷ்வபிரகாஷ், தேர்தல் அதிகாரி ஜெசிமா பானுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு தேர்தல் அதிகாரி 3 முறை வேறு யாராவது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்கிறார்களா என்று கேட்டார். யாரும் பதில் தரவில்லை. அதன்பிறகு 9.45 மணிக்கு பிறகு விஷ்வபிரகாஷ் பேரூராட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதற்கான சான்றிதழை வழங்கினார். 

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சிவராஜன் மற்றும் கட்சியினர் தாமதமாக வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மற்றும் அவர்களது கட்சியினரை பார்த்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் பாலமூர்த்தி தாக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை சூழ்ந்ததால், அங்கிருந்த போலீசார் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிகளை அங்குள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து இருந்தனர். 

தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சிவராஜன் மற்றும் கட்சியினர் தேர்தல் அதிகாரி ஜெசிமா பானுவிடம், எங்களை உள்ளே விட யாரும் அனுமதிக்கவில்லை என்றனர். ஆனால் தேர்தல் அதிகாரி சரியான பதில் தரவில்லை என்று கூறி பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறும்போது, சரியாக 9.30 மணியளவில் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடங்கின. அப்போது யார் எல்லாம் வேட்மனு தாக்கல் செய்கிறீர்கள் என்று கேட்டோம். அதில் தி.மு.க. மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தது. மேலும் 3 முறை தொடர்ந்து நாங்கள் கேட்டோம். வேறு யாரும் மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. அதனையடுத்து 12 கவுன்சிலர்கள் ஆதரவுடன் மனு தாக்கல் செய்த கவுன்சிலர் 
இந்தநிலையில் நேற்று மதியம் நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கு 1-வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் உமாதேவி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்