கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்த புள்ளிமான்

தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கிடந்த புள்ளிமான் கிடந்தது

Update: 2022-03-04 16:39 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடற்கரையோரத்தில் புள்ளி மான் இறந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புள்ளி மான்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், வேடநத்தம் பகுதியில் காட்டுப்பகுதியில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. இதில் புள்ளிமான்களும் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை பகுதியில் ஒரு புள்ளி மான் இறந்த நிலையில் கிடந்தது. 1½ வயது உடைந்த இந்த பெண் புள்ளி மானின் உடலில் பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை.
உடல் மீட்பு
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் மேற்பார்வையில், வனவர் மகேஷ், வனகாவலர் லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த நிலையில் கிடந்த மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இந்த மான் காட்டுப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த போது, யாரேனும் விரட்டியதில் சுவரில் மோதியோ, வேறு ஏதேனும் பொருள் மீது மோதியோ இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மான் கடற்கரை பகுதியில் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்