கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு
கோவையில் வீடுபுகுந்து 10 பவுன் நகை திருட்டு
கோவை
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). லேப் டெக்னீசியன்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவுக்காக தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு சென்று விட்டார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.