திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேரூராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவராக தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேரூராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேரூராட்சிகளில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
மறைமுக தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 21 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. கவுன்சிலர்கள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-
பண்ணைக்காடு
பண்ணைக்காடு பேரூராட்சியில், 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான முருகேஸ்வரி மணிகண்டன் தலைவராகவும், 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் லதா ராஜேந்திரன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கொண்டனர்.
நிலக்கோட்டை
நிலக்கோட்டை பேரூராட்சியில், 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைவராகவும், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகேசன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அம்மையநாயக்கனூர்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில், 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் எஸ்.பி.செல்வராஜ் தலைவராகவும், 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விமல்குமார் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வேடசந்தூர்
வேடசந்தூர் பேரூராட்சியில், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மேகலா கார்த்திகேயன் தலைவராகவும், 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாகுல்அமீது துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
எரியோடு
எரியோடு பேரூராட்சியில், 9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முத்துலட்சுமி கார்த்திகேயன் தலைவராகவும், 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜீவா துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தாநாயகி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வடமதுரை
வடமதுரை பேரூராட்சியில், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிருபராணி கணேசன் தலைவராகவும், 12-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மலைச்சாமி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் அலுவலர் தாஹிரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அய்யலூர்
அய்யலூர் பேரூராட்சியில், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கருப்பன் தலைவராகவும், 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செந்தில் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரோகிணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கன்னிவாடி
கன்னிவாடி பேரூராட்சியில், 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி சண்முகம் தலைவராகவும், 13-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கீதா முருகானந்தம் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஸ்ரீராமபுரம்
ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷகிலா ராஜா தலைவராகவும், 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகேசன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆயக்குடி
ஆயக்குடி பேரூராட்சியில், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மேனகா தலைவராகவும், 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாமணி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாலசமுத்திரம்
பாலசமுத்திரம் பேரூராட்சியில், 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜராஜேஸ்வரி தலைவராகவும், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜய்கிருஷ்ணா துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நெய்க்காரப்பட்டி
நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில், 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கருப்பாத்தாள் தலைவராகவும், 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலாமணி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கீரனூர்
கீரனூர் பேரூராட்சியில், 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கருப்புசாமி தலைவராகவும், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஹாஜி அப்துல்சுக்கூர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேவுகம்பட்டி
சேவுகம்பட்டி பேரூராட்சியில், 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வனிதா தங்கராஜ் தலைவராகவும், 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தெய்வராணி விஜயன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கீதா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அய்யம்பாளையம்
அய்யம்பாளையம் பேரூராட்சியில், 7-வது தி.மு.க. கவுன்சிலர் ரேகா அய்யப்பன் தலைவராகவும், 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜீவானந்தம் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு பேரூராட்சியில், 9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவிதா சின்னதம்பி தலைவராகவும், 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நாகப்பன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அகரம்
அகரம் பேரூராட்சியில், 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நந்தகோபால் தலைவராகவும், 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயபால் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி பேரூராட்சியில், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரதீபா கனகராஜ் தலைவராகவும், 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தி பாரதிராஜா துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சித்தையன்கோட்டை
சித்தையன்கோட்டை பேரூராட்சியில், 10-வது தி.மு.க. கவுன்சிலர் போதும்பொண்ணு என்ற நித்யா தலைவராகவும், 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் உசேன் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாளையம்
பாளையம் பேரூராட்சியில், 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி தலைவராகவும், 13-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் கதிரவன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு
வத்தலக்குண்டு பேரூராட்சியில், 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சிதம்பரம் தலைவராகவும், 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தர்மலிங்கம் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நத்தம் பேரூராட்சி
நத்தம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 6 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றது. 2 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன. இந்தநிலையில் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 11-வது வார்டு கவுன்சிலர் சேக் சிக்கந்தர் பாட்ஷாவும், அ.தி.மு.க. சார்பில் 17-வது வார்டு கவுன்சிலர் சிவாவும் போட்டியிட்டனர். அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்ற தி.மு.க. கவுன்சிலர் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மகேஸ்வரி சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத்தலைவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.