பூமாதேவி கோவிலில் வைகுண்டர் அவதார தின விழா

கோவில்பட்டியில் பூமாதேவி கோவிலில் வைகுண்டர் அவதார தின விழா நடந்தது

Update: 2022-03-04 14:19 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பூமாதேவி கோவிலில் வைகுண்டர் அவதார தின விழா சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அய்யா வைகுண்டருக்கு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. 9 மணிக்கு வைகுண்ட அய்யாவுக்கு உகபடிப்பும், பணிவிடையும் நடைபெற்றது லட்சுமணன் தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பணி விடைகளை செய்தார்.
நிகழ்ச்சியில் சுப்பாராஜ், மாரியப்பன், ஆறுமுகம், மாரிஸ் வரன், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்