காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் மேயராகும் பெண் என்ஜீனியர்
காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக பெண் என்ஜீனியர் தேர்வாக உள்ளார்.
சென்னை,
காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இதில் 36-வது வார்டு உறுப்பினர் ஜானகிராமன், காலமானதால் அந்த வார்டுக்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதம் உள்ள 50 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 32 வார்டுகளில் வெற்றிபெற்று காஞ்சீபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.
புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல 22-வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் குமரகுருநாதன் துணை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
முதுகலை பட்டம்
மேயர் வேட்பாளரான 36 வயதான மகாலட்சுமி, முதுகலைப் பட்டம் பெற்றவர். தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அந்த பணியிலிருந்து விலகி காஞ்சீபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது கணவர் யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
துணை மேயராக வேட்பாளரான குமரகுருநாதன், காஞ்சீபுரத்தில் உணவகங்களை நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார்.