தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

அய்யா அவதார தினத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2022-03-03 23:16 GMT
ஆரல்வாய்மொழி:
அய்யா அவதார தினத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.
பூ மார்க்கெட் 
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. 
இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக பண்டிகை நாட்களில் விலை அதிகமாக காணப்படும.
அய்யா அவதார தினம்
அய்யா அவதார தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனையான பிச்சி நேற்று ஒரே நாளில் ரூ.1,750 உயர்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதுபோல் முல்லை கிேலா ரூ.1000-த்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்தது.
தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- 
அரளி ரூ.220, மல்லிகை ரூ.1,200, சம்பங்கி ரூ.250, கனகாம்பரம் ரூ.550, வாடாமல்லி ரூ.80, துளசி ரூ.45, தாமரை (100எண்ணம்) ரூ.1,500, கோழிபூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.220, சிவந்தி வெள்ளை ரூ.230, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.120  என விற்பனையானது

மேலும் செய்திகள்