நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி.

Update: 2022-03-03 23:00 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சி 49-வது வார்டில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி தி.மு.க. பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் அவர் சாலை மறியலில் ஈடுபட்டதாக 2-வது வழக்கிலும், ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக 3-வது வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜெயக்குமார் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கிலும், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்