சேலம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-03 22:07 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுக தேர்தல்
தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 26 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
நகராட்சிகள்
ஆத்தூர்- நிர்மலாபபிதா
நரசிங்கபுரம்-எம்.அலெக்சாண்டர்
மேட்டூர்-சந்திரா
தாரமங்கலம்-டி.எம்.எஸ்.குணசேகரன்
பேரூராட்சிகள்
அயோத்தியாப்பட்டணம்-பாபு என்கிற செல்வராஜ்
ஆட்டையாம்பட்டி- முருகபிரகாஷ்
இளம்பிள்ளை-நந்தினி ராஜகணேசன்
ஏத்தாப்பூர்-பாபு என்கிற வெங்கடேஷ்வரன்
கீரிப்பட்டி-தேன்மொழி
கெங்கவல்லி-லோகாம்பாள்
செந்தாரப்பட்டி-பவுனம்மாள்
தம்மம்பட்டி-கவிதா ராஜா
தெடாவூர்-வேலு
பனமரத்துப்பட்டி-பரமேஸ்வரி
பெத்தநாயக்கன்பாளையம்-பழனியம்மாள்
பேளூர்-ஜெயசெல்வி
வாழப்பாடி-கவிதா சக்கரவர்த்தி
வீரகனூர்- கமலா சுப்பிரமணியம்
ஓமலூர்- செல்வராணி
கருப்பூர்- சுலோச்சனா
கன்னங்குறிச்சி-குபேந்திரன்
அரசிராமணி-காவேரி
கொங்கணாபுரம்-சுந்தரம்
கொளத்தூர்-பாலசுப்பிரமணியன்
சங்ககிரி-மணிமொழி முருகன்
தேவூர்-தங்கவேல்
பி.என்.பட்டி-பொன்னுவேல் குப்புசாமி
மேச்சேரி- சுமதி
வீரக்கல்புதூர்-தெய்வானைஸ்ரீ
ஜலகண்டாபுரம்-காசி
கூட்டணி கட்சி
தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் கட்சிக்கு பூலாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியும், காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மல்லூர் பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால் இந்த பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவரே தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 
அ.தி.மு.க.
வனவாசி பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அங்கு அ.தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு ஞானசேகரன் போட்டியிடுகிறார். இடங்கணசாலை, எடப்பாடி நகராட்சிகள் மற்றும் நங்கவள்ளி பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியை யார் கைப்பற்றுவார்? என்பது இன்று தெரியவரும்.

மேலும் செய்திகள்