சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
பாலியல் வன்கொடுமை
அரியலூர் மாவட்டம் முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 43). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22.10.2020 அன்று 11 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
15 ஆண்டு சிறை
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிச்சை பிள்ளைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து பிச்சை பிள்ளையை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர்.