சேதமடைந்த மனமகிழ் மன்ற கட்டிடம் இடிக்கப்படுமா?

கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி நாயக்கர் பேட்டை கிராமத்தில் சேதமடைந்த மனமகிழ் மன்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-03 20:45 GMT
கபிஸ்தலம்:
கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி நாயக்கர் பேட்டை கிராமத்தில் சேதமடைந்த மனமகிழ் மன்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி நாயக்கர் பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 25 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி அருகே கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. பின்னர் 1980-ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் பயன்பாட்டிற்காக மனமகிழ் மன்றம் இயங்கி வந்தது.
மனமகிழ் கட்டிடம் இடிக்கப்படுமா?
தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் அருகே பள்ளி இருப்பதால் அதன் அருகே மாணவர்கள் விளையாடுவதும், அடிக்கடி சென்றும் வருகின்றனர். இதனால் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களுக்கு உயிர்சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மனமகிழ் மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்