வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
திருச்சி
தஞ்சாவூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரேம் கலாராணி. இவர், தமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.பயிற்சி மையத்தின் அதிகாரியாக உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி தஞ்சாவூரில் இருந்து கேரள மாநிலம் மூணாறு நோக்கி மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை, சிவகங்கை மாவட்டம் டி.உசிலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார்(வயது 32) ஓட்டினார். திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் கார் நின்றபோது, காரின் அருேக நின்று கொண்டிருந்த ராஜ்குமார் மீது அந்த வழியாக வந்த வேன் ேமாதியதில் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான திருச்சி மாப்பிள்ளை நாய்க்கர் குளத்தெருவை சேர்ந்த சீனிவாசனை(54) கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பளித்தார். தவறான பாதையில் வேனை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தி ஒருவர் பலியான குற்றத்திற்காக, டிரைவர் சீனிவாசனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.