44 ஆடுகள், 800 சேவல்களை பலியிட்டு கறிவிருந்து

மேலூர் அருகே கோவில் திருவிழாவில் 44 ஆடுகள், 800 சேவல்களை பலியிட்டு கறிவிருந்து நடந்தது.. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-03 20:10 GMT
மேலூர், 
மேலூர் அருகே கோவில் திருவிழாவில் 44 ஆடுகள், 800 சேவல்களை பலியிட்டு கறிவிருந்து நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
திருவிழா 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் சத்தியபுரம் முன்பாக மரங்கள் சூழ்ந்த இடத்தில் இலந்தைமரத்தடியில் பழமையான முத்துபிள்ளையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு 3-வது நாள் பரிவேட்டை அன்று கறி விருந்து அன்னதானம் நடைபெறும். 
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் மருளாடி என அழைக்கப்படும் பெண் சாமியாடி ஒருவர் கோவில் பகுதியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த மல்லிகை பூக்களில் நாக பாம்பு போன்று சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். 
கறிவிருந்து 
பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்த 44 ஆட்டுகிடாய்கள், 800 சேவல்களை பலியிட்டு கமகமவென கறி விருந்து சமைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள தென்னை மர தோப்பில் பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. 
இந்த விழாவில் மேலூர் தாலுகா பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.. விழாவையொட்டி மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்