முதியவர் தீக்குளித்து சாவு

வாசுதேவநல்லூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-03 19:25 GMT
வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரத்தைச் சேர்ந்தவர் சங்கையா (வயது 75). நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் தனது கடைசி மகன் வீட்டில் தங்கி, தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மூத்த மகனுடன் சென்று விட்டார். 

இதில் மனவேதனை அடைந்த சங்கையா நேற்று மாலை வீட்டில் விறகுகளை அடுக்கி வைத்து தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டு அதில் விழுந்தார். இதில் அவர் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்