பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தாசையாபுரம்- இலவன்குளம் ரோட்டைச் சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகன் செல்வராகவன் (வயது 20). இவர் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த செல்வராகவன் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வராகவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.