பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-03 18:37 GMT
தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வீரணம் ஊராட்சியில் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவருடன் வீடு கட்டியுள்ளார். 

இதனை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள், இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். 

ஆனால் இதுநாள் வரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் நேற்று வீரணம் கிராமத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலையரசி முத்து தலைமையில் கிராம பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது இன்னும் 15 நாட்களுக்குள் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். 
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்