உலக செவித்திறன் தினம்

வாலாஜா அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-03 18:34 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவித்திறன் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன்  தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் டாக்டர் (பொறுப்பு) வெங்கடேஸ்வரன், காது மூக்கு தொண்டை டாக்டர் மீனா, கேள்வியியல் மற்றும் மொழியியல் நிபுணர் சரஸ்வதி ஆகியோர் செவித்திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். 

மேலும் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது, காது கேட்காத அனைவருக்கும் காது பரிசோதனை செய்யப்பட்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக காது கேள் கருவி வழங்கப்படுகிறது என டாக்டர்கள் பேசினர். 

மேலும் செய்திகள்