2 ஆண்டுகளுக்கு பின்னர் வீரராகவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா

2 ஆண்டுகளுக்கு பின்னர் வீரராகவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-03 14:17 GMT
திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவில் அருகே உள்ள திருக்குளத்தில் வண்ண, வண்ண மலர்களாலும், மின் விளக்குகளால் அலங்கரித்து தயார் நிலையில் இருந்த தெப்பலில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் வீரராக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை திருவள்ளூர், அரக்கோணம், பூந்தமல்லி, கடம்பத்தூர், பேரம்பாக்கம், மணவாளநகர், திருமழிசை, வெள்ளவேடு, என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி நான்கு மாட வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்