தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர்கள் 3-வது நாளாக போராட்டம்
தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர்கள் 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து 180 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கம்பெனிக்கு நிலம் கொடுத்த விவசாய சங்க போராட்டக்குழு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் 2 நாட்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி 3-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ, ஏ.எஸ்.கண்ணன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.