பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது.

Update: 2022-03-02 22:20 GMT
மேலூர், 
மேலூர் அருகே சருகுவலையபட்டி அரியூர்பட்டியில் பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள மோகினிசாத்தான் கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு அனைவரும் மீன்களை பிடிக்க இறங்கினர். 
இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்து அள்ளிச்சென்றனர். அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்பார்கள். இதேபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இந்தபகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்