மேல் மலைக்குன்று பகுதியில் திடீர் காட்டுத்தீ

மேல் மலைக்குன்று பகுதியில் திடீர் காட்டுத்தீ

Update: 2022-03-02 19:48 GMT
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது மேல் மலைக்குன்று. இந்த பகுதி மண்மலை என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் வளர்ந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மேல் மலைக் குன்று பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிங்கம்புணரி மற்றும் மதுரை கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வன அலுவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீ பரவாமல் அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் பல மரங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மலைப் பகுதியில் தீப்பற்றிய நிலையில் மலை அடிவாரத்தில் குடியிருக்கும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மலையில் தீ பரவியதற்கான காரணம் தெரியவில்லை. சிங்கம்புணரி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்