அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் கவுன்சிலர்கள் பதவியேற்பு

அருப்புக்கோட்டை நகராட்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் கவுன்சிலர்கள் பதவியேற்று ெகாண்டனர்.

Update: 2022-03-02 19:33 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகராட்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் கவுன்சிலர்கள்  பதவியேற்று ெகாண்டனர். 
பதவியேற்பு 
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். 
நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்த உடனே 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுசிலாதேவி தனது குடும்பத்துடன் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
வாழ்த்து 
இந்த விழாவில் நகர் நல அலுவலர் ராஜ நந்தினி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ், செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், பிரமுகர் சீனிவாச பெருமாள், வர்த்தக அணி மாவட்ட தலைவர் முத்துவேல், வார்டு செயலாளர் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பதவியேற்றுக்கொண்ட கவுன்சிலர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்