முடுக்கன்குளம் கிராமத்தில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்

முடுக்கன்குளம் கிராமத்தில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2022-03-02 19:30 GMT
காரியாபட்டி, 
 காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் கிராமத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வாலை முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த பணிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பேசுகையில், முடுக்கன்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ப.பா.போஸ், செல்லம், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பாலசெல்லப்பா, ஆனந்த அருள்மொழிவர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கருப்பு ராஜா, ராம்பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்