தினத்தந்தி புகார்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பாய் கடை சந்து பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பொதுமக்கள், காந்திமார்க்கெட், திருச்சி.
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ஒரே ஒரு மருத்துவர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவின்குமார், கரையான் குறிச்சி, அரியலூர்.
சாலையில் குவிந்து கிடக்கும் மண்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி மறைபணி சாலை வழியாக புதுக்கோட்டை நகருக்குள் செல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்சம் செலவில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. அப்போது தார்சாலைக்காக தோண்டிய மண் அனைத்தும் சாலையோரம் குவிந்து கிடக்கிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. தற்போது குவிந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை.
மின்மாற்றி அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா விராச்சிலை மேலக்கட்டிடம் 2-ம் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்சாரம் குறைவாக வருவதால் டி.வி., குளிர்சாதனபெட்டி, கம்ப்யூட்டர், டீயூப்லைட் உள்ளிட்ட அடிப்படை மின்சாதனங்கள் பழுதாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம், திருமயம், புதுக்கோட்டை.
வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச கோரிக்கை
கரூர் மாவட்டம், தோகைமலை பஸ் நிலையம் வடபுறத்தில் குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் முன்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் அடையாளத்திற்கு வெள்ளை வர்ணம் பூசாமல் இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தோகைமலை, கரூர்.
தெருநாய்களை பிடிக்க வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், பீமநகர் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபேல் குணசீலன், காஜாபேட்டை, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், கொள்ளிடம் டோல்கேட்டில் இருந்து கீழவாளாடி வரை மற்றும் லால்குடி ரவுண்டானாவில் இருந்து பூவாளூர் சாலை வரை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளங்கோவன், கீழமுருக்கூர், திருச்சி.
தெருவிளக்கு வேண்டும்
திருச்சி மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் தெருவிளக்கும், மழைநீர் வடிகால், சாலை வசதி மற்றும் உள்ளிட்ட அடிப்படை வசிகள் எதுவும் இல்லலை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளுக்கு தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
பன்றிகள் தொல்லை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் , குண்டூர் பர்மா காலனியில் சில நாட்களாகவே பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குண்டூர் பர்மா காலனி. திருச்சி.