தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
மூங்கில்துறைப்பட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலுவராயன் மகன் நாகமணி(வயது 49). சாராயம் விற்ற வழக்கில் இவரை சங்கராபுரம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நாகமணியின் தொடர் குற்ற செயலை தடுக்கும் வகையில் அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரைசெய்தார். இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் நாகமணியை தடுப்பு காவல் சட்டத்தில் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை, அலுவலர் மூலம் வழங்கப்பட்டது.