தலைகுப்புற கவிழ்ந்த கார்

வேடசந்தூர் அருகே தலைகுப்புற கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தொழில் அதிபர் உயிர் தப்பினார்.

Update: 2022-03-02 15:15 GMT
வேடசந்தூர்:

கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). தொழில் அதிபரான இவர், வேலை விஷயமாக மதுரைக்கு வந்தார். பின்னர் அவர் மதுரையில் இருந்து கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

 திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பிரிவில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது பாஸ்கரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காருக்குள் சிக்கிய பாஸ்கரை மீட்டனர். ஆனால் அவர் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதேபோல் கார் கவிழ்ந்த நேரத்தில், அந்த வழியாக எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்