மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் இயக்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வந்தனர். அவர்கள் அங்கு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சுடுகாடு அமைந்து உள்ளது. இந்த சுடுகாட்டின் நடுவில் மாநகராட்சி சார்பில் வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் பண்டாரம்பட்டி கிராம மக்களின் சுடுகாட்டு கல்லறைகள், நினைவு சின்னங்களை இடித்து அப்புறப்படுத்தி உள்ளார்கள். அந்த பகுதியில் பல அடி ஆழம் தோண்டி, பல கோடி மதிப்பிலான செம்மண்ணையும் விற்பனை செய்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.