80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தவருக்கு வலைவீச்சு
80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
பலாத்காரம்
பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் அங்குள்ள வயல்களில் ஆடுகளை மேய்க்க சென்றார். வயலில் ஆடுகளை மேயவிட்டுவிட்டு, அருகில் இருந்த மரத்தடியில் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டார். இதில் மயங்கி கிடந்த அந்த மூதாட்டியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், மூதாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை பலாத்காரம் செய்த மர்ம நபர் குறித்து விசாரித்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்.