பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி

Update: 2022-03-01 19:30 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரேவதி (வயது 38). இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று நம்பி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லையாம். அத்துடன் ஏற்கனவே செலுத்திய தொகையையும் பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் திருப்பி தரவில்லையாம்.  இதுகுறித்து ரேவதி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார்.  அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்  மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்